என் மலர்

    உலகம்

    உச்ச தலைவர் காமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: அடித்து சொன்ன நேதன்யாகு
    X

    உச்ச தலைவர் காமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: அடித்து சொன்ன நேதன்யாகு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்தக் கொடூர தாக்குதலில் 85 சிறுமிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜெருசலேம்:

    அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 85 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

    வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் பாதுகாப்புத்துறை மந்திரி மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படையின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

    டெஹ்ரானில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடந்தளது. அவர் ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் மக்களிடம் தொலைக்காட்சி மூலம் நேதன்யாகு பேசுகையில், இஸ்ரேலின் தாக்குதலில் சர்வாதிகாரி (காமேனி) கொல்லப்பட்டதற்கு சாத்தியமான நிறைய அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஈரான் மக்கள் திரளாக வீதிகளுக்கு வந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து ஆட்சியைக் கலைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    Next Story
    ×