உலகம்

உக்ரைன் மீது 728 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய ரஷியா
- போலந்து, பெலாரஸ் எல்லையில் உக்ரைனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள லுட்ஸ்க் நகர் மீது கடும் தாக்குதல்.
- மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்களை இங்கேதான் இறக்குமதி செய்து, மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
உக்ரைன் மீது "ஷாஹேத்" டிரோன்கள் மூலம் ரஷியா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. 728 டிரோன்கள், 13 குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
போலந்து, பெலாரஸ் எல்லையில் உக்ரைனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள லுட்ஸ்க் என்ற நகர் மீது கடுமையாக தாக்கியுள்ளது. மேலும் 10 பிராந்தியங்களில் உள்ள முக்கிய நகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் விமான நிலையங்கள் லுட்ஸ்க் நகரில் உள்ளன. இந்த நகரின் மீது சரக்கு மற்றும் விமானப்படை விமானங்கள் பரப்பது வழக்கமான ஒன்று.
உக்ரைனின் வடக்கு பிராந்தியம் ரஷியாவை எதிர்த்து போரிடுவதற்கு முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்களை இங்கேதான் இறக்குமதி செய்து, மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த சப்ளைக்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஜூலை 4ஆம் தேதி ரஷியா இது போன்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருந்தது. உக்ரைன் எல்லையின் முன்பகுதியில் சுமார் ஆயிரம் கி.மீ. தூரம் வரையில் ஆக்கிரமிப்பை விரிவுப்படுத்த ரஷியா தற்போது தாக்குதலை அதிகரித்துள்ளது.