உலகம்

ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம்.. வான்வெளியை மூடிய கத்தார் - காரணம் இதுதான்!
- கத்தார் வான்வெளியைப் பயன்படுத்தும் பிற விமானங்களையும் பாதிக்கும்.
- அமெரிக்காவை பழிவாங்க ஈரான் இங்கு தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், கத்தார் தனது சர்வதேச வான்வெளியை மூடியுள்ளது.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) மாலை அதன் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில், தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது.
இது ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும், கத்தார் வான்வெளியைப் பயன்படுத்தும் பிற விமானங்களையும் பாதிக்கும்.
இதற்கிடையில் தற்போது கத்தாருக்குச் செல்லும் விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவின் முக்கிய விமான படைத்தளமான அல் உதெய்த் கத்தாரில் உள்ளது. மேலும் கத்தாரில் முக்கிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸுவும் இங்கு செயல்படுகிறது.
எனவே தங்கள் அணுசக்தி தளங்களை தாக்கிய அமெரிக்காவை பழிவாங்க ஈரான் இங்கு தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் கத்தார் தனது வான்வெளியை மூடியதாக தெரிகிறது.