உலகம்

சிரியாவின் இடைக்கால அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு
- சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் முதலீட்டு மாநாடு நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.
ரியாத்:
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார்.
இதில் அதிபர் டிரம்ப் பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய பங்காற்றின. இப்போது சிரியா முன்னேறவேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன். சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது. சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும் என தெரிவித்தார்.
சிரியா மீதான தடைகளை நீக்க சவுதி அரேபிய இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொருளாதார தடையை டிரம்ப் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல் ஷராவை சந்தித்தார். 25 ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.