என் மலர்

    மொபைல்ஸ்

    ஐபோன் 16 மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்த ப்ளிப்கார்ட்
    X

    ஐபோன் 16 மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்த ப்ளிப்கார்ட்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ. 1,09,900க்கு வெளியிடப்பட்ட 512 ஜிபி விருப்பம் ரூ. 99,999க்கு விற்பனைக்கு வருகிறது.
    • குறைக்கப்பட்ட விலைகளுடன், ஐபோன் வாங்குபவர்கள் கூடுதல் வங்கி தள்ளுபடி, எக்சேஞ்ச் மற்றும் கேஷ்பேக் சலுகைகளையும் பெறலாம்.

    இந்தியாவில் ஐபோன் 16 பேஸ் வேரியண்ட் 128 ஜிபி மாடல் இந்திய சந்தையில் ரூ. 79,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ப்ளிப்கார்ட் தளத்தின் தற்போதைய "GOAT SALE 2025"-ல் இப்போது ரூ. 69,999 விலையில் வாங்கலாம்.

    அமேசான் வலைதளத்திலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஐபோன் 16 ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    தள்ளுபடி விவரங்கள்:

    ஐபோன் 16 இன் 128 ஜிபி விலை தற்போது பிளிப்கார்ட்டில் ரூ. 69,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது . இது ரூ. 79,900 வெளியீட்டு விலையை விட ரூ. 9,901 குறைவாகும். ரூ. 89,900க்கு அறிமுகப்படுத்தப்பட்ட 256 ஜிபி வேரியண்ட் தற்போது ரூ. 81,999க்கு கிடைக்கிறது. மேலும் ரூ. 1,09,900க்கு வெளியிடப்பட்ட 512 ஜிபி விருப்பம் ரூ. 99,999க்கு விற்பனைக்கு வருகிறது.

    தள்ளுபடி மட்டுமின்றி ஐபோனின் விலையை மேலும் குறைக்க வாடிக்கையாளர்கள் ரூ. 3,000 மதிப்புள்ள கூடுதல் வங்கிச் சலுகைகளைப் பெறலாம்.

    இதற்கிடையில், அமேசான் தளத்தில், ஐபோன் 16 தற்போது ரூ. 73,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் அறிமுக விலையை விட ரூ. 6,400 குறைவு ஆகும். 256 ஜிபி மற்றும் 512 ஜிபி பதிப்புகள் முறையே ரூ. 83,500 மற்றும் ரூ. 99,900 விலையில் கிடைக்கின்றன. குறைக்கப்பட்ட விலைகளுடன், ஐபோன் வாங்குபவர்கள் கூடுதல் வங்கி தள்ளுபடி, எக்சேஞ்ச் மற்றும் கேஷ்பேக் சலுகைகளையும் பெறலாம்.

    ஐபோன் 16 அம்சங்கள்:

    ஐபோன் 16 மாடல் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே, 2,000 நிட்ஸ் வரை பீக் பிரைட்னஸ் மற்றும் செராமிக் ஷீல்ட் பாதுகாப்பை கொண்டுள்ளது. இது A18 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் iOS 18 உடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை, இது 48MP பிரைமரி சென்சார் மற்றும் பின்புறத்தில் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 12MP TrueDepth சென்சாரைப் பெறுகிறது.

    இந்த ஐபோன் மாடலில் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி LTE, வைபை 6E, ப்ளூடூத், GPS, NFC மற்றும் யுஎஸ்பி டைப்-சி கொண்டிருக்கிறது.

    Next Story
    ×