மொபைல்ஸ்

ஐபோன் 17 சீரிஸ் இத்தனை வண்ணங்களில் கிடைக்குமா? லீக் ஆன புது தகவல்
- ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- டார்க் புளூ ஐபோன் 15 ப்ரோவின் ப்ளூ டைட்டானியம் நிறத்தால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய ஐபோன்கள் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த நிலையில், புதிய ஐபோன்களின் வண்ண விருப்பங்கள் குறித்து சமீபத்தில் பல தகவல்கள் வந்துள்ளன. இப்போது, ஒரு புதிய அறிக்கை இந்த தகவல்களை உறுதிப்படுத்துகிறது. இதில் ஐபோன் 17 ப்ரோ மாடல் நான்கு வண்ண விருப்பங்களை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. புதிய மாடல்கள் ஆப்பிள் சாதனத்திற்கான பிளாக் மற்றும் வைட் என பாரம்பரிய வண்ணங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டுள்ள சமீபத்திய வலைப்பதிவில், ஐபோன் 17 ப்ரோ பிளாக், டார்க் புளூ, ஆரஞ்சு மற்றும் சில்வர் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இத்துடன் புதிய ஐபோன்களின் ரெண்டர்களையும் பகிர்ந்துள்ளார். இதில் பிளாக் மற்றும் வைட் நிறங்கள் ஐபோன் 16 ப்ரோ சீரிசின் பிளாக் டைட்டானியம் மற்றும் வைட் டைட்டானியம் வண்ணங்களை ஒத்தி உள்ளன.
டார்க் புளூ ஐபோன் 15 ப்ரோவின் ப்ளூ டைட்டானியம் நிறத்தால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. ஐபோன் 17 ப்ரோ மாதிரிகள் புதிய பெரிய கேமரா பார் வடிவமைப்பை LED ஃபிளாஷ் மற்றும் LiDAR சென்சார் வலது பக்கத்தில் அமைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
நான்கு வண்ணங்களுக்கு கூடுதலாக, ஆப்பிள் மற்றொரு நிறத்தை சோதித்து வருவதாக மஜின் பு கூறுகிறார். இருப்பினும் இது எந்த சாதனத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐபோன் 17 ப்ரோவின் அலுமினியம் ஃபிரேமை பூர்த்தி செய்ய புதிய வண்ணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று டிப்ஸ்டர் கூறினார்.
சமீபத்திய அறிக்கையின்படி, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக், டார்க் புளூ, கிரே, ஆரஞ்சு மற்றும் வைட் என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 17 ஸ்மார்ட்போன் பிளாக், கிரீன், லைட் புளூ, பர்பில், ஸ்டீல் கிரே மற்றும் வைட் என ஆறு வண்ணங்களில் கிடைக்கும் என்றும், ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் பிளாக், லைட் புளூ, லைட் கோல்டு மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ஏர் மாடல்களுடன் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.