என் மலர்

    மொபைல்ஸ்

    மலிவு விலையில் புது ஸ்மார்ட்போன்கள் - அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் நத்திங்?
    X

    மலிவு விலையில் புது ஸ்மார்ட்போன்கள் - அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் நத்திங்?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் "லைட்" அல்லது "T" பிராண்டிங்கைக் கொண்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • தற்போதுள்ள மாடல்கள் சந்தையில் சிறப்பாக செயல்படவில்லை.

    நத்திங் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நத்திங் போன் 3a சீரிசை அறிமுகம் செய்தது. இந்த மாத தொடக்கத்தில் நத்திங் போன் 3 மாடலை வெளியிட்டது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட OEM விரைவில் அதன் ஸ்மார்ட்போன்கள் பிரிவை விரிவுபடுத்தி, மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று டிப்ஸ்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் "லைட்" அல்லது "T" பிராண்டிங்கைக் கொண்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தற்போதுள்ள மாடல்கள் சந்தையில் சிறப்பாக செயல்படவில்லை. சியோமி, ரியல்மி மற்றும் ஒன்பிளஸ் என மற்ற ஸ்மார்ட்போன் பிரான்டுகள் விற்பனையை அதிகரிக்க இதேபோன்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன.

    மலிவான 'லைட்' அல்லது 'T' பிராண்டு ஸ்மார்ட்போன்களை நத்திங் வெளியிடலாம் என்று டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (@heyitsyogesh) எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களில் "லைட்" அல்லது "T" பிரான்டிங் இருக்கலாம்.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 79,999 மற்றும் ரூ. 89,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நத்திங் போன் 3a மற்றும் போன் 3a ப்ரோ ஆகியவை முறையே ரூ. 22,999 மற்றும் ரூ. 27,999 விலையில் தொடங்குகின்றன.

    அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் 3 மாடலில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 SoC, 5500mAh பேட்டரி, 6.67-இன்ச் 120Hz 1.5K AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டுள்ளது. மேலும், புதிய கிளிம்ஃப் மேட்ரிக்ஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் கூடிய டிரான்ஸ்பேரன்ட் பேக் பேனல் மற்றும் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    Next Story
    ×