மொபைல்ஸ்

வெளியீட்டுக்கு ரெடியாகும் ஒப்போ டர்போ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
- ப்ரோ வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 8s Gen 4 சிப்செட் உடன் வரலாம்.
- இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
ஒப்போ K13 Turbo சீரிஸ் வருகிற 21-ந்தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் சமூக வலைதள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புடன், புதிய ஸ்மார்ட்போன்களின் வெப்பத்தை கட்டுப்படுத்த பிரைமரி கேமராவின் கீழ் கூலிங் ஃபேன் வழங்கப்படலாம் என்பதைக் காட்டும் விளம்பர வீடியோவையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் PLE110 என்ற மாடல் எண்ணுடன் கீக்பென்ச் வலைத்தளத்திலும் ஸ்மார்ட்போன் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் Pro அல்லாத வேரியண்ட் மீடியாடெக் டிமென்சிட்டி 8450 பிராசஸர் கொண்டிருக்கும் என்று முன்பு கூறப்பட்டது. அதே நேரத்தில் ப்ரோ வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 8s Gen 4 சிப்செட் உடன் வரலாம்.
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒப்போ, சீன சமூக வலைதளமான வெய்போவில், வருகிற 21 ஆம் தேதி ஒப்போ K13 Turbo சீரிசை வெளியிடுவதாகப் பதிவிட்டுள்ளது. இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அதன் உலகளாவிய வெளியீடு குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.
வீடியோவின் படி, ஒப்போ K13 Turbo சீரிசில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த பிரைமரி கேமராவின் கீழ் RGB விளக்குகள் பொருத்தப்பட்ட டர்போ விசிறி இருக்கும்.
ஒப்போK13 Tubro சீரிஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
PLE110 என்ற மாடல் எண்ணைக் கொண்ட ஒரு ஒப்போ ஸ்மார்ட்போன் சமீபத்தில் கீக்பென்ச் தளத்தில் பட்டியலிடப்பட்டது . இது குறித்து ஃபோன்அரினா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ K13 Turbo சீரிசில் உள்ள ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போன் சிங்கில்-கோர் செயல்திறனில் 2176 மதிப்பெண்களையும் மல்டி-கோர் செயல்திறனில் 6618 மதிப்பெண்களையும் பெற்றது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் 16GB RAM உடன் இணைக்கப்பட்ட ARM ARMv8 ஆக்டா-கோர் SoC உடன் சோதிக்கப்பட்டது. சமீபத்தில், ஒப்போ K13 Turbo சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்தன.
ஒப்போ K13 Turbo ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8450 பிராசஸரை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒப்போK13 Turbo Pro ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8s Gen 4 சிப்செட்டுடன் வரும் என்று தெரிகிறது.
இரண்டு ஸ்மார்ட்போன்களும் 50MP பிரைமரி கேமரா, 2MP சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைப் பெறும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், இரண்டு ஸ்மார்ட்போன்களும் 16MP செல்ஃபி கேமராவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.