என் மலர்

    மொபைல்ஸ்

    பட்ஜெட் பிரிவில் 7000mAh பேட்டரி.. இணையத்தில் லீக் ஆன ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள்
    X

    பட்ஜெட் பிரிவில் 7000mAh பேட்டரி.. இணையத்தில் லீக் ஆன ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேல், வலது மற்றும் இடது விளிம்புகளில் சமமான பெசல்களைக் கொண்டதாகத் தெரிகிறது.
    • செவ்வக கேமரா ஐலேண்ட் பின்புற பேனலின் மற்ற பகுதிகளை விட சற்று உயரமாக உள்ளது.

    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 15 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், ரெட்மி 15 ஸ்மார்ட்போன் தொடர்பாக கசிந்த ரெண்டர்களில் புது தகவல்கள் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக டிப்ஸ்டர் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் வரக்கூடும். ரெட்மி 15 ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்புடன் வரும் என்று தெரிகிறது. ரெட்மி பிராண்ட் சமீபத்தில் அதன் வலைத்தளத்தில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டது. அதன்படி விரைவில் ரெட்மி 15 மற்றும் ரெட்மி 15C ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

    வடிவமைப்பு, அம்சங்கள்:

    ரெட்மி 15 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆர்சீன் லூபின் என்ற டிப்ஸ்டரால் கசிந்துள்ளன. இதிலுள்ள முதல் ரெண்டர் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே காட்டுகிறது. இது மேல், வலது மற்றும் இடது விளிம்புகளில் சமமான பெசல்களைக் கொண்டதாகத் தெரிகிறது.

    டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள மற்ற மூன்று ரெண்டர்களில், ரெட்மி 15 ஸ்மார்ட்போன் பர்பில், கோல்டு மற்றும் பிளாக் என மூன்று வண்ணங்களில் இருப்பதை காட்டுகின்றன. ரெட்மி 15 ஸ்மார்ட்போனின் மூன்று ரெண்டர்களிலும், பின்புற பேனலின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள மூன்று பின்புற கேமரா அமைப்பையும் காணலாம்.

    இந்த கேமராக்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும் முதல் கேமரா வளையத்தின் வலதுபுறத்தில் ஒரு LED ஃபிளாஷ் அமைந்துள்ளது. செவ்வக கேமரா ஐலேண்ட் பின்புற பேனலின் மற்ற பகுதிகளை விட சற்று உயரமாக உள்ளது.

    இதுதவிர இத்தாலிய சில்லறை விற்பனையாளரின் வலைத்தளத்தில் ரெட்மி 15 ஸ்மார்ட்போனிற்கான பட்டியலில், இந்த மாடல் 4ஜி வெர்ஷனை கொண்டுள்ளது என்றும் இது 6.9-இன்ச் LCD ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்கும் IP64 தரச்சான்று பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ரெட்மி 15 அறிமுகத்தை நிறுவனம் வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சமீபத்தில் நாட்டில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் வருகையை அறிவித்தது.

    Next Story
    ×