மொபைல்ஸ்

இது என்ன சென்டிமென்ட்? புதிய S26 அல்ட்ராவிலும் மாற்றம் இருக்காது - வெளியான புது தகவல்
- கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் ஒரே திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளன.
- முந்தைய மாடலான கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலை போலவே 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. புதிய கேலக்ஸி S26 அல்ட்ரா மாடலில் பேட்டரி மேம்படுத்தப்பட்டு, அதிக திறன் கொண்ட புது யூனிட் இடம்பெறும் என்று பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், கேலக்ஸி S26 Ultra ஸ்மார்ட்போனில் பேட்டரி அப்கிரேடு வழங்கப்படுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடக்கத்தில் இருந்தே கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் ஒரே திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளன. இருப்பினும், மென்பொருள் மற்றும் யுஐ மூலம் சாம்சங் நிறுவனம் பயனர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கி வருகிறது.
கேலக்ஸி S26 அல்ட்ரா பேட்டரி:
டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (@UniverseIce) எக்ஸ் தள பதிவில் சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை பெறும் என்று கூறியிருந்தார். இது உண்மையாக இருந்தால், 2026 ஆம் ஆண்டு சாம்சங் அதன் கேலக்ஸி S அல்ட்ரா மாடலின் பேட்டரி அளவை அதிகரிக்காத ஆறாவது ஆண்டாக இருக்கும்.
தற்போது சாம்சங் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் S சீரிஸ் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா, அதன் முந்தைய மாடலான கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலை போலவே 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2020-இல் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி S20 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் 5,000mAh பேட்டரியை கொண்டிருந்தது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது TSMC இன் 3 நானோமீட்டர் முறையில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் மிகமெல்லிய பெசல்களுடன் 6.89 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம்.