என் மலர்

    மொபைல்ஸ்

    வேற லெவல் அம்சங்களுடன் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் உருவாக்கும் விவோ - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    வேற லெவல் அம்சங்களுடன் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் உருவாக்கும் விவோ - வெளியீடு எப்போ தெரியுமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போன் ஆலிவ் கிரீன் மற்றும் கிளாம் ஒயிட் வண்ணங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
    • விவோ Y400 ப்ரோ 5ஜி மாடலில் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் வரும் என்று தெரிகிறது.

    விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூன் 20-ம் தேதி விவோ நிறுவனம் Y400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் புதிய ஸ்மார்ட்போன் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த ப்ரோ-அல்லாத மாடலின் வெளியீட்டிற்கு முன்னதாக, அதன் இந்திய விலை மற்றும் ஸ்மார்ட்போனின் சாத்தியமான வண்ணங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இது ஒரு மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மாடல் என்று கூறப்படுகிறது, அதன் ப்ரோ-மாடலை விட ஒப்பீட்டளவில் குறைந்த விலை கொண்டது. இருப்பினும், சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் விவோ Y400 5ஜி மாடலின் வெளியீட்டு தேதியை இன்னும் வெளியிடவில்லை.

    புதிய ஸ்மார்ட்போன் தொடர்பாக 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி , விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 20,000 வரம்பிற்குள் நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் மிட் ரேஞ்ச் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலை ரூ. 24,999 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999 என நிர்ணயம் செய்யப்படலாம்.

    விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போன் ஆலிவ் கிரீன் மற்றும் கிளாம் ஒயிட் வண்ணங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு மாறாக, விவோ Y400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஃப்ரீஸ்டைல் ஒயிட், ஃபெஸ்ட் கோல்ட் மற்றும் நெபுலா பர்பிள் வண்ண விருப்பங்களில் வழங்கும் என்று தெரிகிறது.

    விவோ Y400 5ஜி அம்சங்கள்:

    விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. விவோ Y400 ப்ரோ 5ஜி மாடலில் 6.77-இன்ச் Full-HD+ 3D Curved AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது. இதுவும் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 nits பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், 8 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 50MP சோனி IMX882 பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    விவோ Y400 ப்ரோ 5ஜி மாடலில் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,500mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×