என் மலர்

    புதிய கேஜெட்டுகள்

    பட்ஜெட் விலையில் 2 மாடல்கள்.. புது டேப்லெட்கள் அறிமுகம் செய்த ஏசர் இந்தியா
    X

    பட்ஜெட் விலையில் 2 மாடல்கள்.. புது டேப்லெட்கள் அறிமுகம் செய்த ஏசர் இந்தியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரு டேப்லெட்களிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இரண்டு டேப்லெட்களும் கோல்டு நிறத்தில் கிடைக்கின்றன.

    ஏசர் நிறுவனத்தின் இரண்டு புதிய டேப்லெட் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. ஏசர் ஐகானியா 8.7 மற்றும் ஏசர் ஐகானியா 10.36 என அழைக்கப்படுகின்றன. இரண்டு புதிய டேப்லெட் மாடல்களிலும் டூயல் பேண்ட் வைபை, டூயல் சிம் 4ஜி எல்டிஇ, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஏசர் ஐகானியா 8.7 மாடலில் மீடியாடெக் ஹீலியோஸ் P22T பிராசஸர், 5100 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஏசர் ஐகானியா 10.36 மாடலில் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் மற்றும் 7400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் முறையே 8MP மற்றும் 16MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.2, ஓடிஜி, டூயல் சிம் 4ஜி எல்டிஇ வழங்கப்பட்டுள்ளது. இரு டேப்லெட்களில் சிறிய மாடலில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியும் பெரிய ஸ்கிரீன் கொண்ட மாடலில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியும் வழங்கப்பட்டு உள்ளது.

    ஏசர் ஐகானியா 8.7 மாடலின் விலை ரூ. 11 ஆயிரத்து 990 என்றும் ஐகானியா 10.36 மாடலின் விலை ரூ. 14 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு மாடல்களும் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. விற்பனை அமேசான், ஏசர் இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது.

    Next Story
    ×