அறிந்து கொள்ளுங்கள்

இன்டர்நெட் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்பலாம்: வந்தாச்சு பிட்சாட் ஆப்
- பிட்சாட் செயலி இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய செயலி தகவல் தொடர்பு உலகில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும்.
எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்து வருபவர் ஜாக் டோர்சி. இவர் 'பிட்சாட்' (Bitchat) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிட்சாட் செயலி இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.
பிட்சாட், செய்திகளை அனுப்பவும் பெறவும் ப்ளூடூத் (Bluetooth) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம் பயனர்கள் இணைய அணுகல் இல்லாத பகுதிகள், இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். பேரிடர் காலங்கள் அல்லது தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.
இதுதொடர்பாக ஜாக் டோர்சி கூறுகையில், பிட்சாட் செயலி தற்போது மறுபரிசீலனையில் உள்ளது. விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
Next Story