என் மலர்

    அறிந்து கொள்ளுங்கள்

    இனி அப்படி செய்ய வேண்டியதில்லை... வாட்ஸ்அப்பில் வெளியாகும் புது அப்டேட்
    X

    இனி அப்படி செய்ய வேண்டியதில்லை... வாட்ஸ்அப்பில் வெளியாகும் புது அப்டேட்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆவணத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்யப்பட்டவுடன், வாட்ஸ்அப் ஒரு PDF-ஐ உருவாக்கும்.
    • இன்ஸ்டால் செய்யப்பட்ட கூகுள் டிரைவ் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் அம்சத்தை தனது செயலியில் அறிமுகம் செய்ய வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியின் ஐஓஎஸ் வெர்ஷனில் கிடைக்கிறது. மேலும் இது செயலியில் இருந்து வெளியேறாமல் ஒரு ஆவணத்தை ஸ்கேன் செய்து, அவற்றை மற்ற பயனர்களுக்கு மீடியா இணைப்பாக அனுப்ப அனுமதிக்கிறது.

    கடந்த வாரம், வாட்ஸ்அப் ஒரு புதிய ஏஐ அம்சத்தை சோதிக்கத் தொடங்கியது, இது ஆண்ட்ராய்டில் சில பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சாட்களில் ஏஐ சார்ந்து இயங்கும் செய்தி சுருக்கங்களை பார்க்க அனுமதிக்கிறது.



    ஐஓஎஸ் வெர்ஷனுக்கான வாட்ஸ்அப் செயலியில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.25.18.29 பீட்டாவிற்குப் புதுப்பித்த பிறகு, இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்து இருக்கிறது. இருப்பினும், இந்த அம்சம் இன்னும் உருவாக்கத்தில் உள்ளது. மேலும் பீட்டா சேனலில் இன்னும் இயக்கப்படவில்லை.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின் படி, வாட்ஸ்அப்பில் ஆவணங்கள் இணைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஆவணங்களை பிரவுஸ் செய்வது மற்றும் கேலரியில் இருந்து தேர்வு செய்யக்கோரும் ஆப்ஷனின் கீழ் தோன்றும் புதிய ஸ்கேன் செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வழங்குகிறது.

    வாட்ஸ்அப் ஐஓஎஸ் வெர்ஷனில் உள்ள இந்த அம்சத்தின் அடிப்படையில், ஸ்கேன் ஆப்ஷன் ஐகானை தட்டும்போது இந்த அம்சம் கேமராவைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் படங்களை கைமுறையாகப் பிடிக்க தேர்வு செய்யலாம் அல்லது ஒரு ஆவணத்தைக் கண்டறியும்போது செயலி தானாகவே படங்களைப் பிடிக்க அனுமதிக்கலாம்.




    ஆவணத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்யப்பட்டவுடன், வாட்ஸ்அப் ஒரு PDF-ஐ உருவாக்கும், அதை வேறொரு பயனருக்கு அனுப்பலாம் அல்லது உங்களுக்கே கூட அனுப்பிக் கொள்ளலாம். இந்த PDF-ஐ ஸ்மார்ட்போனில் கூட சேமிக்கலாம்.

    வாட்ஸ்அப் அதன் ஸ்கேன் டாக்யூமென்ட்ஸ் அம்சத்தை உங்கள் ஸ்மார்ட்போனில் கொண்டு வரும் வரை, பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட கூகுள் டிரைவ் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    செயலியிலின் ஸ்டான்டர்டு வெர்ஷனில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, ஸ்கேன் டாக்யூமென்ட்ஸ் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கான வாட்ஸ்அப் வெர்ஷனில் வெளியிடப்படும்.

    Next Story
    ×