பைக்

வாடிக்கையாளர்களுக்கு ஷாக்... 2026 நிஞ்ஜா ZX-10R-ஐ அறிமுகம் செய்த கவாசகி
- 2026 கவாசகி நிஞ்ஜா ZX-10R மாடலில் உள்ள எஞ்சின் 193.1bhp பவர் மற்றும் 112Nm டார்க் திறன் கொண்டிருக்கிறது.
- பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை 330mm டிஸ்க்குகள், பின்புறம் ஒற்றை 220mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனம் 2026 நிஞ்ஜா ZX-10R பைக்கை ரூ. 19.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது ரூ. 18.50 லட்சம் விலை கொண்ட 2025 மாடலை விட ரூ. 99,000 அதிகமாகும். விந்தையாக, இந்த மோட்டார்சைக்கிள் அதன் சக்தி மற்றும் டார்க் உள்ளிட்டவைகளில் லேசான சரிவை சந்தித்துள்ளது.
சமீபத்திய மாடலோடு சேர்த்து, 2025 நிஞ்ஜா ZX-10R மாடலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பழைய மாடலின் இருப்பை அகற்றுவதற்கான கவாசகியின் உத்தியாக புதிய மாடலின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. புதிய மாடலை அதிக விலைக்கு பட்டியலிடுவது நிச்சயமாக 10R ஐ வாங்குபவர்களை பழைய மாடலைத் தேர்வுசெய்யவும், சிறிது பணத்தை மிச்சப்படுத்தவும் ஊக்குவிக்கும்.
மேலும், பழைய மாடலின் சற்று அதிக பவர் மற்றும் டார்க் 2026 மாடலை விட அதைத் தேர்வுசெய்ய மற்றொரு காரணமாகும். அதனுடன் சேர்த்து, 2025 மாடலில் ரூ. 1.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தெளிவாக மிகவும் நியாயமான மற்றும் சிறந்த தேர்வாக அமைகிறது. தள்ளுபடி சலுகை செப்டம்பர் 30ஆம் தேதியோ அல்லது ஸ்டாக் இருக்கும் வரையிலோ செல்லுபடியாகும்.
2026 கவாசகி நிஞ்ஜா ZX-10R மாடலில் உள்ள எஞ்சின் 193.1bhp பவர் மற்றும் 112Nm டார்க் திறன் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலின் எஞ்சினை விட 7bhp மற்றும் 2.9Nm குறைவு ஆகும். இவை தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றமும் இல்லை.
அம்சங்களின் பட்டியலில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி கொண்ட TFT கன்சோல், பல ரைடு மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ், குரூயிஸ் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், எஞ்சின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும். பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை 330mm டிஸ்க்குகள், பின்புறம் ஒற்றை 220mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.