பைக்

வேற லெவல் அப்டேட்களுடன் புதிய அப்ரிலியா ஸ்கூட்டர் அறிமுகம்
- புதிய அப்ரிலியா SR GT ரெப்ளிகா யூரோ 5+ விதிகளுக்கு உட்பட்ட லிக்விட்-கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது.
- இதன் 125cc சிங்கில் சிலிண்டர் எஞ்சின் 8,900rpm இல் 14.75bhp பவர் மற்றும் 6,750rpm இல் 12Nm டார்க் வெளிப்படுத்துகிறது.
ஐரோப்பிய சந்தைக்கான அப்ரிலியா SR GT ரெப்ளிகா 2025 வெளியிடப்பட்டது. இது 125cc மற்றும் 200cc வேரியண்ட்களைக் கொண்ட அதன் "அர்பன் அட்வென்ச்சர்" ஸ்கூட்டர் வரிசையின் மிகவும் ஸ்போர்ட்டியான மாடல் ஆகும். இந்த மாடல் உலக சாம்பியன் ஜார்ஜ் மார்ட்டின் மற்றும் மார்கோ பெஸ்செச்சி ஆகியோரால் பந்தயத்தில் பயன்படுத்திய அப்ரிலியா RS-GP மாடலின் இயந்திரங்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
சுங்கம் மற்றும் வரிகளைத் தவிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தில் SR GT ரெப்ளிகா ரூ. 4.7 லட்சத்தில் இருந்து விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான்.
இந்த ஸ்கூட்டர் மேட் பிளாக் நிற பேஸ், ரெட் மற்றும் பர்ப்பில் நிற கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. சாம்பியன்ஷிப் இயந்திரங்களுடன் வலுவான இணைப்பிற்காக ரைடர்ஸ் மார்ட்டின் மற்றும் பெஸ்ஸெச்சியின் பந்தய எண்களைக் கூட தேர்வு செய்யலாம். ரெட் ஹைலைட் உடன் பிளாக் நிற ரிம், டெய்சி-ப்ரொஃபைல் பிரேக் டிஸ்க்குகள் மற்றும் ஸ்போர்ட்டி டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய அப்ரிலியா SR GT ரெப்ளிகா யூரோ 5+ விதிகளுக்கு உட்பட்ட லிக்விட்-கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது. இதன் 125cc சிங்கில் சிலிண்டர் எஞ்சின் 8,900rpm இல் 14.75bhp பவர் மற்றும் 6,750rpm இல் 12Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதன் 200cc எஞ்சின் 8,650rpm இல் 17.4bhp பவர் மற்றும் 7,000rpm இல் 16.5Nm டார்க் வழங்குகிறது.
இந்த மாடல்களில் அகலமான ஹேண்டில்பார், அப்ரைட் சீட்டிங், லாங்க டிராவல் சஸ்பென்ஷன் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான டயர்கள், பயணிகள் தார் சாலையிலிருந்து கற்கள் அல்லது மண் பாதைகளுக்கு எளிதாக மாற அனுமதிக்கின்றன.