பைக்

ஜிஎஸ்டி மாற்றம்... அடியோடு குறையும் ஹோண்டா பைக் விலைகள்... வெளியான அறிவிப்பு
- ஹோண்டாவின் பிரபல மாடல்களான ஆக்டிவா, ஷைன் 125, யூனிகார்ன், சிபி350 மற்றும் பல மாடல்களும் அடங்கும்.
- பிரீமியம் பைக் பெறும் விலை உயர்வுகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
ஹோண்டா நிறுவனம், அதன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை, மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து, ரூ.18,887 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஹோண்டா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு முழு ஜிஎஸ்டி பலன்களை வழங்க உள்ளது.
புதிய ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், 350 சிசிக்கு கீழ் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு முந்தைய 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது. ஹோண்டாவின் பிரீமியம் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய பைக்குகள் (350 சிசிக்கு மேல்) தவிர, மற்ற பைக் மாடல்கள் அனைத்தும் விலைக் குறைப்பைக் கண்டுள்ளது.
இதில் ஹோண்டாவின் பிரபல மாடல்களான ஆக்டிவா, ஷைன் 125, யூனிகார்ன், சிபி350 மற்றும் பல மாடல்களும் அடங்கும். 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பைக்குகளுக்கான விலைக் குறைப்பை ஹோண்டா அறிவித்துள்ளது.
ஆனால் அதன் பிரீமியம் பைக் பெறும் விலை உயர்வுகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. புதிய ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், 350 சிசிக்கு மேல் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு முந்தைய 31 சதவீதத்திலிருந்து 40 சதவீத வரி விதிக்கப்படும்.