என் மலர்

    பைக்

    140கிமீ ரேஞ்ச் வழங்கும் E லூனா ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்
    X

    140கிமீ ரேஞ்ச் வழங்கும் E லூனா ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்கூட்டர் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • மாடல் தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமல்ல, சிறு வணிகங்கள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகிறது.

    கைனடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் புதிய E லூனா பிரைம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய E லூனா பிரைம் மாடல் ரூ. 82,490 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இந்த மின்சார ஸ்கூட்டர் 110 கிலோமீட்டர் மற்றும் 140 கிலோமீட்டர் என இருவித ரேஞ்ச் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய E லூனா பிரைம், பயணிகள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் வழக்கமான 100 சிசி மற்றும் 110 சிசி பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிறது.

    புதிய E லூனா பிரைம் மாடலில் 16 இன்ச் அலாய் வீல்கள், பிரகாசமான எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட்டியான ஒற்றை இருக்கை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல விசாலமான பகுதி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடல் தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமல்ல, சிறு வணிகங்கள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகிறது. இந்த ஸ்கூட்டர் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    கரடுமுரடான நிலப்பரப்புகளுக்கு நீடித்து உழைக்கும் அதே வேளையில், செயல்திறன் மற்றும் வசதியையும் பராமரிக்கும் வகையில் E லூனா பிரைம் இருக்கும் என்று கைனடிக் கிரீன் கூறுகிறது. இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை கொண்ட நிறுவனம், E லூனா பிரைம் மாடல் பரவலாகக் கிடைக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×