பைக்

மீட்டியோர் 350 பைக்கை அப்டேட் செய்த ராயல் என்ஃபீல்டு - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
- இந்த பைக்கில் 349 சிசி ஜே சிரீஸ் ஏர் கூல்டு எஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
- இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது மீட்டியோர் 350 பைக்கை நவீனப்படுத்தி, புதிய வண்ணங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் பயர்பால், ஸ்டெல்லர், அரோரா, சூப்பர் நோவா என நான்கு வேரியன்ட்களில், புதுமையான நிறங்களில் காட்சியளிக்கிறது.
புதுமையான எல்இடி ஹெட்லைட், டிரிப்பர் நேவிகேஷன் பாட், எல்இடி இண்டிகேட்டர், டைப்-சி யூஎஸ்பி பாஸ்ட் சார்ஜிங் போர்ட், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற நவீன அம்சங்கள் இந்த பைக்கின் பயர்பால் மற்றும் ஸ்டெல்லர் வேரியன்ட்களில் இடம்பெறுகின்றன.
அட்ஜெஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் போன்றவை சூப்பர் நோவா, அரோரா ஆகிய வேரியன்ட்களில் கூடுதல் அம்சங்களாக கிடைக்கிறது.
இந்த பைக்கில் 349 சிசி ஜே சிரீஸ் ஏர் கூல்டு எஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 20.2 பி.எச்.பி. பவரையும், 27 என்.எம். டார்க் திறனையும் வழங்கும். இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இதன் ஆரம்ப விலை ரூ.1.96 லட்சம்.
இந்த பைக்கின் பயர்பால் வேரியன்ட் ஆரஞ்ச் மற்றும் கிரே நிறங்களிலும், ஸ்டெல்லர் மேட் கிரே மற்றம் மெரைன் புளூ ஆகிய நிறங்களிலும், அரோரா வேரியன்ட் ரெட்ரோ கிரீன், அரோரா ரெட் ஆகிய நிறங்களிலும், சூப்பர் நோவா கருப்பு நிறத்திலும் கிடைக்கிறது.