கார்

இனி ஏழு ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம் - ஹோண்டா கொடுத்த சூப்பர் அப்டேட்
- டாப் வேரியண்ட்கள் ஹோண்டா சென்சிங் மூலம் ADAS செயல்பாடுகளையும் வழங்குகின்றன.
- 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை அமேஸ் மாடலுக்கு புதிய "கிரிஸ்டல் பிளாக் பேர்ல்" நிறத்தை சேர்த்துள்ளது. இந்தச் சேர்க்கையுடன், அமேஸ் செடான் மாடல் இப்போது லூனார் சில்வர், மீடியோராய்டு கிரே, பிளாட்டினம் ஒயிட், கோல்டன் பிரவுன், ரேடியன்ட் ரெட் மற்றும் அப்சிடியன் புளூ உள்பட மொத்தம் ஏழு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.
இளம் வாடிக்கையாளர்களிடையே அடர் மற்றும் ஸ்போர்ட்டியர் வண்ணங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், புதிய நிறம் சேர்க்கப்பட்டுள்ளதாக ஹோண்டா கூறுகிறது.
புதிய நிறம் தவிர, இந்த காரில் வேறு எந்த இயந்திர மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா அமேஸ் மாடல் தொடர்ந்து 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை அமேஸ் மாடல் DRLகளுடன் ஆட்டோமேடிக் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED ஃபாக் லைட்கள், 15-இன்ச் அலாய் வீல்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளேவுடன் 7 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு முன்பக்கத்தில், ஆறு ஏர்பேக்குகள், ISOFIX மவுண்ட்கள் மற்றும் EBD உடன் ABS ஆகியவற்றைப் பெறுகிறது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்கள் ஹோண்டா சென்சிங் மூலம் ADAS செயல்பாடுகளையும் வழங்குகின்றன.
ஜிஎஸ்டி 2.0 இன் முழு பலனையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் தலைமுறை அமேஸ் ரூ. 95,000 வரை விலைக் குறைப்புகளை பெறுகிறது.