கார்

கார்களுக்கு அதிகபட்சம் ரூ.1.12 லட்சம் குறைவு... மாருதி சுசுகி சொன்ன சூப்பர் தகவல்
- இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன.
- பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன.
மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வரி விதிப்பில் மாறுதல்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த மாற்றங்கள் ஜிஎஸ்டி 2.0 என அழைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி 2.0 அறிவிப்புக்கு பிறகு பல்வேறு பொருட்களின் விலைகள் மாறியுள்ளன. அதன்படி முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்கள் விலையை குறைத்து வருகின்றன.
இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன. பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன. அதன்படி நெக்சா பிராண்டு மாடல்களின் விலை குறைப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதிய விலை விவரங்கள்:
இக்னிஸ் மாடலின் விலை ரூ. 71,300 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,35,100 என மாறியுள்ளது.
பலேனோ மாடலின் விலை ரூ. 86,100 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,98,900 என மாறியுள்ளது.
ஃப்ராங்க்ஸ் மாடலின் விலை ரூ. 1,12,600 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 6,84,900 என மாறியுள்ளது.
கிராண்ட் விட்டாரா மாடலின் விலை ரூ. 1,07,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 10,76,500 என மாறியுள்ளது.
எக்ஸ்எல் 6 மாடலின் விலை ரூ. 52,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 11,52,300 என மாறியுள்ளது.
ஜிம்னி மாடலின் விலை ரூ. 51,900 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 12,31,500 என மாறியுள்ளது.
இன்விக்டோ மாடலின் விலை ரூ. 61,700 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 24,97,400 என மாறியுள்ளது.