கார்

முழுசா ரூ. 1 லட்சம்... டொயோட்டாவின் வேற லெவல் அறிவிப்பு
- ஐந்து முறை இலவச சர்வீஸ் செஷன்கள், ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, கார்ப்பரேட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும்.
- செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வரவிருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் நவராத்திரியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும், அதன் கார்களுக்கு முழு ஜிஎஸ்டி 2.0 சலுகைகளையும் வழங்கியுள்ளது.
"இப்போதே வாங்கி 2026 இல் பணம் செலுத்துங்கள்" என்று அழைக்கப்படும் இந்த பிரச்சாரம் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் கோவாவை உள்ளடக்கிய மேற்கு பிராந்தியத்தில் கிடைக்கிறது. மேலும் இது செப்டம்பர் 30, 2025 வரை செல்லுபடியாகும்.
இந்தத் திட்டம், டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிஸர் ஹைரைடர், கிளான்ஸா மற்றும் டைசர் போன்ற மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை ஒருங்கிணைந்த பலன்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் டிசம்பர் 2025 வரை மாதத்திற்கு ரூ. 99 மட்டுமே செலுத்தி மூன்று மாத EMI சலுகையை பெறலாம். இத்துடன் ஐந்து முறை இலவச சர்வீஸ் செஷன்கள், ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, கார்ப்பரேட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும்.
செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில், பண்டிகை கால தேவை மற்றும் பலன்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் டொயோட்டா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.