சினிமா செய்திகள்

18 மில்லியன் : அமரன் படத்தின் ஒட்டுமொத்த வியூஸ்களை 1 நாளில் அள்ளிய மதராஸி டிரெய்லர்
- ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
- இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
வெளியான 1 நாளில் இவ்வளவு அதிகமான பார்வைகள் ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பார்ப்பை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இது அமரன் படத்தின் டிரெய்லர் வியூக்களை 1 நாளில் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story