சினிமா செய்திகள்

நடிகர் கிங்காங் குடும்பத்துடன் விஜய் சேதுபதி - வைரல் வீடியோ
- நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
- சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார்.
நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.
கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிலையில், நடிகர் கிங்காங் மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மணமக்களை நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோவை கிங்காங் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.