சினிமா செய்திகள்

AK 64 படத்தின் அப்டேட் கொடுத்த அஜித்
- அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது குட் பேட் அக்லி திரைப்படம்
- அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு அடுத்து அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " எனக்கு கிடைத்த இயக்குநர்களும் , தயாரிப்பார்களுக்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் என்னோட தொலை நோக்கு பார்வையை புரிந்துக் கொள்கின்றனர். நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது, அடுத்த வருட கோடை விடுமுறைக்கு திரைப்படம் வெளியாகும்.
ரேசிங் சீசனில் நான் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன். ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த விரும்புகிறேன். நான் என்று மீண்டும் ரேசிங்கிற்கு செல்ல வேண்டும் என நினைத்தேனோ அன்று முடிவு செய்தேன் நாம் மீண்டும் ஃபிட்டாக வேண்டும் என. கடந்த 8 மாத காலத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். டயட், சைக்கிலிங், ஸ்விமிங் , வெஜிடேரியனாகவும் மாறியதால் இது சாத்தியமானது" என கூறியுள்ளார்.