என் மலர்

    சினிமா செய்திகள்

    காதல் மனைவியுடன் ரொமாண்டிக் வாக் சென்ற அஜித்  - வைரல் வீடியோ
    X

    காதல் மனைவியுடன் ரொமாண்டிக் வாக் சென்ற அஜித் - வைரல் வீடியோ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    • ஸ்பெயின் வீதிகளில் அஜித்தும், ஷாலினியும் மகிழ்ச்சியுடன் உலா சென்றுள்ளனர்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்புக்கு சில காலம் இடைவெளி விடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் அஜித் தனது மனைவி ஷாலினி, மகன், மகளுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    ஸ்பெயின் வீதிகளில் அஜித்தும், ஷாலினியும் மகிழ்ச்சியுடன் உலா சென்றுள்ளனர். மேலும் அங்கு நடந்த கால்பந்து போட்டியை மகன் ஆத்விக்குடன் ஷாலினி கண்டு ரசித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஷாலினி.

    வீதியில் அவர்கள் இருவரும் நடந்து வருவதை அவரே செல்ஃபீ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நாம் இருவரும் இணைந்து இருப்பதே சிறந்த இடமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    அஜித் பைக் சுற்றுலா செல்லும் போது பேசிய வீடியோ அண்மையில் வெளியாகி மிகவும் வைரலானது. அதைத்தொடர்ந்து தற்பொழுது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×