சினிமா செய்திகள்

பிரதமர் மோடியை குறிப்பிடாமல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பதிவிட்ட அமிதாப் பச்சன்
- பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நடிகர் அமிதாப் பச்சன் எதுவும் கூறவில்லை.
- அதற்காக அவர் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான மோதல் காரணமாக எல்லைப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இருப்பினும், நேற்று இரவு பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை நடத்தியது. இதுபோன்ற சூழ்நிலையில், நாட்டில் உள்ள அனைவரும் ராணுவத்தின் துணிச்சலை பாராட்டி ஊக்குவித்தனர். பல பாலிவுட் நடிகர்களும் ராணுவத்திற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
இதற்கிடையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நடிகர் அமிதாப் பச்சன் எதுவும் கூறவில்லை. அதற்காக அவர் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதல் குறித்து அவரது தந்தை எழுதிய கவிதையை அமிதாப் பச்சன் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்த அரக்கன் அப்பாவித் தம்பதியை வெளியே இழுத்துச் சென்று, கணவனை நிர்வாணமாக்கி அவரைச் சுடத் தொடங்கினான். மனைவி தன் காலில் விழுந்து தன் கணவனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்ட பிறகும், அந்த கோழைத்தனமான அரக்கன் கணவனை மிகவும் இரக்கமின்றிச் சுட்டுக் கொன்று, அவளை விதவையாக்கினான்!!
மனைவி, 'என்னையும் கொல்லுங்கள்!' என்று சொன்னபோது, அந்த அரக்கன், 'வேண்டாம்! நீ போய் உன் மக்களிடம் சொல். மகளின் மனநிலையைப் பற்றி, பூஜ்ய பாபுஜியின் ஒரு கவிதையின் ஒரு வரி எனக்கு நினைவுக்கு வந்தது.
அந்த மகள் '….' க்குச் சென்று, "உலகம் சிதையின் சாம்பலில் குங்குமம் கேட்கிறது" என்று சொன்னாள் என்று வைத்துக்கொள்வோம் ... (பாபுஜியின் வரி). பிறகு '….' அவளுக்கு குங்குமம் கொடுத்தான்!!!" என்று கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பதிவிட்ட அமிதாப் பச்சன், அதில் பிரதமர் மோடியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.