சினிமா செய்திகள்

Bahubali Returns - மீண்டும் திரைக்கு வரும் பாகுபலி
- 2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியானது பாகுபலி திரைப்படம்.
- பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்தது.
2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதனால் படத்தை ரீரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் இணையத்தில் சில மாதங்களாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இதற்கு தற்பொழுது பதில் கூறும் வகையில் படக்குழு பாகுபலி பாகம் 1 திரைப்படத்தை இந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் வெளிவிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இப்படம் ரீரிலீஸ்-லும் மாபெரும் வெற்றியை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.