என் மலர்

    சினிமா செய்திகள்

    அக்டோபர் 5-ல் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 - போட்டியாளர்கள் இவங்களா?
    X

    அக்டோபர் 5-ல் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 - போட்டியாளர்கள் இவங்களா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிக்பாஸ் பட்டத்தை வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை கிடைக்கும்.
    • பிக்பாஸ் 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.

    தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

    100 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டில் சக போட்டியாளர்களுடன் தங்கி, கொடுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் வெல்லுகிறார்.

    இதுவரை ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்–லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, சித்தப்பா சரவணனின் வெளியேற்றம், தாடி பாலாஜி சம்பவம் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றுள்ளன.

    முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.

    பிக்பாஸ் 9 ஆவது சீசனில் கலந்து கொள்ளும் நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நடிகர் சித்து, பாரதி கண்ணம்மா ஃபரினா ஆசாத், சீரியல் நடிகை ஜனனி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டி மன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் உட்பட பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

    குறிப்பாக ஹார்ட் பீட் வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்து வந்த பாடினி (அனிதா) மற்றும் கார்த்திக்குமாரின் (விஜய்) சிறு வயது காதாபாத்திரத்தில் நடித்த ரோஷனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×