சினிமா செய்திகள்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர்
- ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
- அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தொண்டு நிறுவன நிதி திரட்டல் கிரிக்கெட் போட்டியில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் விளையாடினார்.
இது தொடர்பான புகைப்படங்களை லார்ட்ஸ் மைதானம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் போராடி இறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
Next Story