சினிமா செய்திகள்

PROMO வீடியோவின் முதுகெலும்பு..! இளையராஜாவுக்கு நன்றி கூறிய Bro Code பட இயக்குனர்
- கார்த்திக் யோகி இயக்கத்தில் "ப்ரோ கோட்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன்.
- இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய மாபெரும் ஹிட் பாடலான "கல்யாண மாலை" பாடல் இடம்பெற்றிருந்தது.
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
விழாவின்போது, ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை நடத்தினர்.
இதில், டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் "ப்ரோ கோட்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன்.
இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
"ப்ரோ கோட்" படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த ப்ரோமோ வீடியோவில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய மாபெரும் ஹிட் பாடலான "கல்யாண மாலை" பாடல் இடம்பெற்றிருந்தது.
இதனால், இப்பாடலை பயன்படுத்த அனுமதி வழங்கிய இளையராஜாவிற்கு நன்றி கூறி ப்ரோ கோட் பட இயக்குனர் கார்த்திக் யோகி சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," ப்ரோ கோட் படத்தின் PROMO வீடியோவின் முதுகெலும்பாக இருக்கும் தலைசிறந்த படைப்பான 'கல்யாண மாலை'யை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி ராஜா சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.