என் மலர்

    சினிமா செய்திகள்

    அஜித் மீது பயங்கர கிரஷ்... ஆனா அவரு என்கிட்ட இப்படி சொல்லிட்டாரு - மனம் திறந்த மகேஸ்வரி
    X

    அஜித் மீது பயங்கர கிரஷ்... ஆனா அவரு என்கிட்ட இப்படி சொல்லிட்டாரு - மனம் திறந்த மகேஸ்வரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஷ்வரி நடித்திருந்தார்.
    • கடைசி நாள் சூட்டிங்கின் போது அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன்.

    அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் அஜித்தை காதலித்தேன் என்று பிரபல நடிகை மகேஸ்வரி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    1997ம் ஆண்டு வெளியான நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஸ்வரி நடித்திருந்தார். அந்த சமயத்தில் அஜித்குமார் மீது தனக்கு கிரஷ் ஏற்பட்டது நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஜெகபதி பாபுவின் டாக் ஷோவில் கலந்து கொண்டு பேசிய மகேஸ்வரி, "அஜித் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் மீது பயங்கர கிரஷ். கடைசி நாள் சூட்டிங்கின் போது அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன். அப்போது அஜித் என்னிடம் வந்து மகி, நீ எனக்கு தங்கச்சி மாதிரிமா. வாழ்க்கையில் உனக்கு என்ன தேவையாக இருந்தாலும் என்னை கூப்பிடு. நான் உனக்காக வருவேன் என்று கூறினார். அதை கேட்டதும் என் மனசே உடைச்சிடுச்சு" என்று தெரிவித்தார்.

    இதை கேட்டு அருகில் இருந்த நடிகை மீனா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். மகேஸ்வரியும் மீனாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×