என் மலர்

    சினிமா செய்திகள்

    துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்கும் `காந்தா
    X

    துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்கும் `காந்தா'

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துல்கர் சல்மான் மற்றும் ராணா தகுபதி இருவரும் இணைந்து காந்தா என்ற படத்தில் நடிக்கவுள்ளனர்.
    • படத்தின் பூஜை விழா இன்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். அவர் தற்பொழுது லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் மற்றும் ராணா தகுபதி இருவரும் இணைந்து காந்தா என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கவுள்ளார். படத்தின் பூஜை விழா இன்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழு கலந்துக் கொண்டனர்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , சுல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் இயக்குனரான இதற்கு முன் நெட்பிலிக்ஸ்- இல் வெளியான தி ஹண்ட் ஃபார் வீரப்பன் மற்றும் நிலா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    படத்தை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×