என் மலர்

    சினிமா செய்திகள்

    ஹ்ரித்திக் ரோஷன் - Jr.NTR நடித்த  War 2 திரைவிமர்சனம்
    X

    ஹ்ரித்திக் ரோஷன் - Jr.NTR நடித்த War 2 திரைவிமர்சனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முன்னாள் ரா ஏஜென்ட்டான ஹிருத்திக் ரோஷன், ஃப்ரீலான்சர் வேலை பார்த்து வருகிறார்.
    • காலி கேங், இந்திய பிரதமரை கொலை செய்ய திட்டம் போடுகிறது.

    கதைக்களம்

    முன்னாள் ரா ஏஜென்ட்டான ஹிருத்திக் ரோஷன், ஃப்ரீலான்சர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காலி என்னும் சீக்ரெட் கேங், ஹிருத்திக் ரோஷனை வேலைக்கு அழைக்கிறது. அழைப்பை ஏற்றுக் கொண்ட ஹிருத்திக் ரோஷன், தனக்கு குருவாக இருக்கும் அஸ்தோஷ் ராணாவை கொல்கிறார். இதை அறிந்த ரா ஏஜென்ட்டின் தலைமை அதிகாரி அனில் கபூர், ரா ஏஜென்ட் ஜூனியர் என் டி ஆரை மூலமாக ஹிருத்திக் ரோஷனை பிடிக்க முயற்சி செய்கிறார். இதற்கிடையில் காலி கேங், இந்திய பிரதமரை கொலை செய்ய திட்டம் போடுகிறது.

    இறுதியில் ஹிருத்திக் ரோஷனை, ஜூனியர் என் டி ஆர் பிடித்தாரா? இந்திய பிரதமரை கொலை செய்யும் திட்டம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஹிருத்திக் ரோஷன், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிக வசனம் இல்லாமல் கண் பார்வை மற்றும் உடல் மொழியால் நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் பிரமிக்க வைத்து இருக்கிறார்.

    இவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார் ஜூனியர் என் டி ஆர். இவரது பார்வை, ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். குறிப்பாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் நடனம் ஆடும் காட்சி அசர வைக்கிறது.

    ரா ஏஜென்ட் தலைமை அதிகாரி அனில் கபூர் அனுபவ நடிப்பையும், கியாரா அத்வானி கவர்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரத்தில் வருபவர்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அயன் முகர்ஜி. இதில் இந்தியாவை அழிக்க சதி திட்டம் போடும் வெளிநாட்டினர், அவர்களை எதிர்க்கும் சூப்பர் பவர் கொண்டவர்கள் என்று ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கொடுக்க நினைத்து இருக்கிறார். இது ஓரளவிற்கு ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சண்டை காட்சிகளே அதிகம் இருக்கிறது. ரெயில், விமானம், கப்பல், கார் என்று சண்டை நீண்டு கொண்டே போகிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகள் ஒரு சில இடங்களில் நன்றாகவும், ஒரு சில இடங்களில் சுமாராகவும் இருக்கிறது.

    இசை

    பிரிதம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாராவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    பெஞ்சமின் ஜாஸ்பரின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    தயாரிப்பு

    ஆதித்யா சோப்ரா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    ரேட்டிங் - 3/5

    Next Story
    ×