சினிமா செய்திகள்

"கூலி" படத்தை நான் இன்னும் பார்க்கலங்க..!- அமீர் கான் தடாலடி
- 'கூலி' திரைப்படத்தை பற்றி அமீர் கான் விமர்சித்து பேசியதாக தகவல்.
- அமீர் கான் தான் செய்யும் அனைத்து வேலைகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தை பற்றி அமீர் கான் விமர்சித்து பேசியதாக வெளியாகும் நேர்காணல் முற்றிலும் தவறானது என அமீர் கான் தரப்பு சார்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமீர் கான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமீர் கான் கூலி திரைப்படம் குறித்து எந்த நேர்காணலும் வழங்கவில்லை என்பதை திட்டவட்டமாகக் கூற விரும்புகிறது.
சமூக ஊடகங்களில் ஒரு போலி நேர்காணல் வலம் வருகிறது. அதில் அமீர் கான் கூலி திரைப்படத்தை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அது ஒரு போலி நேர்காணல்.
அமீர் கான் தான் செய்யும் அனைத்து வேலைகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர். மேலும், அவர் தனது படைப்புகளைப் பற்றி எளிதாகப் பேசுவதில்லை.
உண்மை என்னவென்றால், அமீர் கான் இன்னும் கூலி படத்தைப் பார்க்கவில்லை. அமீர் கான் படத்தைப் பார்க்கும் போது தான் உடன் இருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆசைப்படுகிறார். ஆனால், ஒரு சில காரணங்களால், அது இன்னும் நடக்கவில்லை.
கூலியின் வெற்றி, சம்பந்தப்பட்ட அனைவரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கடின உழைப்பைப் பற்றி நிறைய பேசுகிறது.
அந்த நேர்காணலும் அத்தகைய செய்திகளும் தவறானவை என்பதை நினைவில் கொள்ளவும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.