என் மலர்

    சினிமா செய்திகள்

    Filmfare விருதுகளை வீட்டின் கழிவறை கைப்பிடிகளாக பயன்படுத்துகிறேன் - நடிகர் நசீருதீன் ஷா Thug life!
    X

    Filmfare விருதுகளை வீட்டின் கழிவறை கைப்பிடிகளாக பயன்படுத்துகிறேன் - நடிகர் நசீருதீன் ஷா Thug life!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த ஆண்டின் சிறந்த நடிகர் இவர்தான் என்று சொன்னால் அது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும்
    • நான் மேலே பார்த்து, என் தந்தையிடம் இதையெல்லாம் பார்க்கிறீர்களா என்று கேட்டேன்.

    பாலிவுட் மூத்த நடிகர் நசீருதீன் ஷா திரைப்பட விருதுகள் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.

    பல நடிகர்கள் விருதுகளைத் துரத்திக் கொண்டிருக்கும் வேளையில் அவரின் வெளிப்படையான மற்றும் வேடிக்கையான கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நசீருதீன் ஷா, தனக்குக் கிடைத்த சில Filmfare விருதுகள் தனது பண்ணை வீட்டின் கழிவறையில் கைப்பிடிகளாகப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

    அவர் கூறியதாவது, "ஒரு கதாபாத்திரத்தைச் சித்தரிப்பதற்காகத் தனது வாழ்க்கையையும் முயற்சியையும் அர்ப்பணித்த எந்தவொரு நடிகரும் ஒரு நல்ல நடிகர். நீங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, இந்த ஆண்டின் சிறந்த நடிகர் இவர்தான் என்று சொன்னால் அது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.

    தான் தற்போதெல்லாம் விருது விழாக்களில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டதாகவும், கடைசியாக வழங்கப்பட்ட இரண்டு Filmfare விருதுகளை வாங்க கூட செல்லவில்லை என்றும் ஷா தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் "அந்த விருதுகளைப் பற்றி நான் பெருமைப்படவில்லை. அதனால், நான் ஒரு பண்ணை வீடு கட்டியபோது, இந்த விருதுகள் அனைத்தையும் அங்கே வைக்க முடிவு செய்தேன். கழிப்பறைக்குச் செல்லும் எவருக்கும் தலா இரண்டு விருதுகள் கிடைக்கும், ஏனென்றால் கழிப்பறையில் உள்ள அனைத்து கைப்பிடிகளும் Filmfare விருதுகள் தான்.


    இந்த கோப்பைகளில் எனக்கு எந்த மதிப்பும் தெரியவில்லை. நான் முதன்முதலில் கோப்பைகளைப் பெற்றபோது மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் பின்னர் என்னைச் சுற்றி கோப்பைகள் குவிய ஆரம்பித்தன.

    இந்த விருதுகள் எல்லாம் பரப்புரையின் விளைவுதான் என்பதை பின்னர் உணர்ந்தேன். ஒருவர் இந்த விருதுகளைப் பெறுவது அவர்களின் தகுதியின் காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நான் அவற்றைக் கைவிட ஆரம்பித்தேன்" என்று ஷா கூறினார்.

    இருப்பினும், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற சிவில் விருதுகளைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் கூறினார்.

    "நான் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றபோது, என் தொழில் வாழ்க்கையைப் பற்றி எப்போதும் கவலைப்பட்ட என் மறைந்த தந்தையை நினைவு கூர்ந்தேன்.

    அந்த மரியாதைகளைப் பெற நான் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றபோது, நான் மேலே பார்த்து, என் தந்தையிடம் இதையெல்லாம் பார்க்கிறீர்களா என்று கேட்டேன். அந்த நேரத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று நசீருதீன் ஷா கூறினார்.

    Next Story
    ×