சினிமா செய்திகள்

War 2 படத்தின் Janaab-e-Aali பாடல் டீசர் வெளியீடு!
- ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் தற்போது காலடி பதித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
திரைப்படம் மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.
இரண்டு ராணுவ வீரர்கள் வெவ்வேறு இலக்கை நோக்கி பயனிக்கின்றனர், இந்த இருவருடைய மனநிலை மற்றும் கோட்பாடுகள் வெவ்வேறாக இருக்கிறது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் படத்தின் பாடலான ஜனாப் இ ஆலி பாடலின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஹ்ரித்திக் மற்றும் ஜூஇயர் என்.டி.ஆர் இருவரும் மிகவும் அசத்தலான நடனாம் ஆடுகின்றனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.