சினிமா செய்திகள்

ஒன்றல்ல, இரண்டல்ல... '3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை' - ஜான்வி கபூர்
- தமிழ் படங்களிலும் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார்.
- 2 குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள்.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டார்.
'தேவரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவிலும் கால்பதித்த ஜான்வி கபூர், தற்போது ராம்சரண் ஜோடியாக 'பெத்தி' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படங்களிலும் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார்.
இதற்கிடையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, "எனக்கு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை உள்ளது. 3 என்னுடைய லக்கி நம்பராகும். அதற்காகவே 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள நினைக்கிறேன்.
மேலும், 2 குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். 3-வது குழந்தை இருந்தால், அவர்களை சண்டை போடாமல் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். இருவருக்கும் சமாதானம் செய்யவும், ஆதரவாக இருக்கவும் உதவியாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.