சினிமா செய்திகள்

பரம் சுந்தரி படம் வெற்றி பெற ஜான்வி கபூர் & சித்தார்த் மல்ஹோத்ரா திருப்பதியில் தரிசனம்
- பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.
மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரித்துள்ள ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கியுள்ளார். மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ராவும் தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் காதலிக்கின்றனர். இவர்களது காதல் மற்றும் குடும்பங்களிடையே பிரச்சனை ஏற்படுகிறது . இதுப்போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.
இப்படம் சிரிப்பு, காதல், பிரச்சனை மற்றும் எதிர்ப்பார்க்காத டிவிஸ்டுகளுடன் திரைக்கதை அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பதியில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் சாமி தரிசனம் செய்தனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.