என் மலர்

    சினிமா செய்திகள்

    சம்பளத்தை உயர்த்திய ஜான்வி கபூர் - Peddi படத்தின் சம்பளம்  எவ்வளவு தெரியுமா?
    X

    சம்பளத்தை உயர்த்திய ஜான்வி கபூர் - Peddi படத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர்.
    • ராம் சரண் நடிக்கும் பெத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர். இவரது நடிப்பு மற்றும் தோற்றம் அனைவராலும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் பெத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இப்படத்தை இயக்குகிறார்.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    ஜான்வி கபூர் இப்படத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. தேவரா படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற ஜான்வி தற்பொழுது அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். ஏனெனில் தெலுங்கு சினிமா மார்கெட்டில் ஜான்வியின் புகழ் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்தடுத்து பெரிய நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×