சினிமா செய்திகள்

தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து
- Naal 2 என்ற மராத்திய படத்துக்காக 4 வயது குழந்தை Treesha தேசிய விருது வென்றார்.
- உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள் என்று கமல் பாராட்டு
செப்டம்பர் 23 ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் Naal 2 என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4 வயது குழந்தை Treesha-க்கு நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் என் 6 வயதில்தான் என் முதல் விருதை வென்றேன்; அந்த சாதனையை முறியடித்ததற்காக Treesha Thosar-க்கு, என் மனம் நிறைந்த பாராட்டுகள்; நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள்: உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.
Next Story