சினிமா செய்திகள்

கண்ணப்பா படத்தின் திரைவிமர்சனம்
- சிவ பக்தன் கண்ணப்பாவின் வாழ்க்கை கதையாகும் கண்ணப்பா
- சிறுவயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லாதவராக வளர்கிறார் கதாநாயகனான தின்னன்.
கதைக்கரு
சிவ பக்தன் கண்ணப்பாவின் வாழ்க்கை கதையாகும்.
கதைக்களம்
சிறுவயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லாதவராக வளர்கிறார் கதாநாயகனான தின்னன். சிறு வயதில் தன் நண்பனை காளி தேவிக்கு நரபலி கொடுப்பதை பார்த்து கடவுள் மீதே கடுப்பாகிறார் தின்னன்.
இதனால் தன் ஊரில் ஒரு உயிர் கூட இனிமேல் சாகக் கூடாது என முடிவெடுத்து அதற்காக போராடும் வீரனாக வாழ்ந்து வருகிறார். இப்படி வாழ்ந்து கொண்டு இருக்கும் தின்னன் எப்படி தீவிர சிவ பக்தன் ஆனான்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்து இருக்கும் விஷ்ணு மஞ்சு கதாப்பாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சிவனை வழிபடும் நெமலியாக ப்ரீத்தி முகுந்தன் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட குறைவு வைக்காமல் முதல் காட்சியில் இருந்து கடைசி வரை நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் பார்வையாளர்களை கவர்கிறார்.
சிவனாக நடித்த அக்ஷய் குமார், பார்வதியாக நடித்த காஜல் மற்றும் கேமியோ ரோல்களில் நடித்த மோகன்லால், பிரபாஸ் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இயக்கம்
கடவுளுக்கு மாமிசம் படைத்து, தனது வாயால் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து பக்திக்கு நல்ல மனசு மட்டுமே முக்கியம் என்பதை உலகுக்கே எடுத்துரைத்த கண்ணப்பாவின் கதையை இந்தளவுக்கு மெனக்கெட்டு பெரிய பட்ஜெட்டில் பல முன்னணி நடிகர்களை கேமியோக்களாக நடிக்க வைத்து எடுத்ததற்கு இயக்குநர் முகேஷ் குமார் சிங் மற்றும் கதை மற்றும் திரைக்கதை எழுதிய விஷ்ணு மஞ்சு - க்கு பாராட்டுகள்.
மேலும் கண்ணாப்பா கதையை மகாபாராதத்துடன் தொடர்பு படுத்தி அதன் பின்னணி கதை கூறியது கூடுதல் சிறப்பு. கேமியோ கதாப்பாத்திரங்களை சரியான இடத்தில் பொறுத்தியது படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்
இசை
ஸ்டீபனின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
தயாரிப்பு
Twenty Four Frames Factory & AVA Entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.