என் மலர்

    சினிமா செய்திகள்

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
    X

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜூன் 20ம் தேதி “சீதாரே ஜமீன் பர்” வெளியீட்டிற்காக காத்திருக்கும் அமீர் கான்.
    • லோகேஷ் கனகராஜ் மற்றும் நான் ஒரு படத்தில் பணிபுரிய உள்ளோம்.

    லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர். கமல்ஹாசன் நடித்த "விக்ரம்", மற்றும் விஜய்யுடன் "மாஸ்டர்", "லியோ" மற்றும் கார்த்தியுடன் "கைதி" போன்ற அதிரடி மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை எடுத்தவர்.

    இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    வரும் ஜூன் 20ம் தேதி "சீதாரே ஜமீன் பர்" வெளியீட்டிற்காக காத்திருக்கும் அமீர் கான், செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்த தகவல் உறுதிப்படுத்தினார்.

    அப்போது அவர்,"லோகேஷ் கனகராஜ் மற்றும் நான் ஒரு படத்தில் பணிபுரிய உள்ளோம். இது ஒரு சூப்பர் ஹீரோ படம். இது ஒரு பெரிய அளவிலான அதிரடி படம். அது அடுத்த ஆண்டு, இரண்டாம் பாதியில் தொடங்கும்," என்றார்.

    2014-ம் ஆண்டு வெளியான தனது நகைச்சுவை படமான"பிகே" படத்தின் தொடர்ச்சி குறித்த செய்திகளை ஆமிர் கான் நிராகரித்தார். அதற்கு பதிலாக, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க "பிகே" இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் மீண்டும் இணைவதாக அவர் கூறினார்.

    Next Story
    ×