சினிமா செய்திகள்

மலையாளத்தின் முதல் பெண் சூப்பர் ஹீரோ... டிக்கெட் முன்பதிவு - பாராட்டுகளை அள்ளும் Lokah
- நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
- இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
இப்படத்தை தயாரித்த துல்கர் சல்மானைஇப்படி ஒரு திரைப்படத்தை தயாரித்ததற்கு கொண்டாடி வருகின்றனர்.. இப்படம் மலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. படத்தில் சில நட்சத்திர நடிகர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு மிக வேகமாக நடைப்பெறுகிறது. நாளை லோகா திரைப்படம் தமிழில் வெளியாகிறது. மோகன்லால் நடிப்பில் வெளியான ஹிருதயபூர்வம் படத்தை விட இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.