என் மலர்

    சினிமா செய்திகள்

    நானியின் The Paradise படப்பிடிப்பு தொடக்கம்
    X

    நானியின் The Paradise படப்பிடிப்பு தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
    • தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.

    தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. நானியின் வித்தியாசமான தோற்றம், உடல் பாவனை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    திரைப்படத்தில் சொனாலி குல்கர்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தை நானி அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஹிட் 3 திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மற்றும் படத்தொகுப்பை நவீன் நூலி மெற்ற்கொள்கின்றனர்.

    திரைப்படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    Next Story
    ×