சினிமா செய்திகள்

அனிருத் இசைநிகழ்ச்சிக்கு தடை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்.
- கூவத்தூரில் இசை கச்சேரி நாளை நடக்க இருக்கிறது
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவரது இசையில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
அனிருத்தின் இசை கச்சேரி கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைப்பெற இருந்தது ஆனால் ரசிகர்களின் பெரும் வரவேற்பு இருந்ததால் இன்னும் பெரிய இடத்தில் வைக்கலாம் என முடிவு செய்து அதனை நிறுவனம் ரத்து செய்தது.
பின் சென்னைக்கு அருகில் உள்ள கூவத்தூரில் இசை கச்சேரி நாளை நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த இசை கச்சேரி நடத்த கூடாது எனவும் மாவட்ட ஆட்சியரிடம் அனுபதி பெறாமல் இதனை நடத்துகின்றனர் எனவும் செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ பனையூர் பாபு தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்துள்ளன.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் கான்செர்ட் நடத்த எந்தவித தடையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.