சினிமா செய்திகள்

முடி உதிர்ந்து வயதான தோற்றத்தில் பிரபாஸ் - என்ன ஆச்சு?
- பிரபாஸ் தி ராஜா சாப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்
- இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் கண்ணப்பா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பிரபாஸ் தி ராஜா சாப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார்.
திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபாஸின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் பிரபாஸ் தலையில் முடி குறைவாக சொட்டை விழுந்தது போல் காட்சியளிக்கிறார்.நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருகின்றனர். மேலும் இப்படம் ஒரு ஏ.ஐ புகைப்படம் என தெரிய வந்துள்ளது.
Next Story