சினிமா செய்திகள்

மூத்த மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ரவி மோகன்
- ரவி மோகன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
- ரவி மோகன் தன்னுடைய 22 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே ரவி மோகன் அவரது 34-வது படமாக கராத்தே பாபு என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
ரவி மோகன் தன்னுடைய 22 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதனை கராத்தே பாபு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.
சமீபத்தில் ரவி மோகனுக்கும் அவரது மனைவியான ஆர்த்திக்கும் இடையே கருத்து முரண்பாடு மற்றும் மன கசப்பு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ரவி மோகன் அவரது காதலியான கெனிஷா உடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மூத்த மகன் ஆரவின் பிறந்தநாளை முன்னிட்டு தன் மகன்களை சந்தித்தார். அப்புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.