சினிமா செய்திகள்

ஆர்த்தியின் ஆடம்பர செலவுகளால் கடனாளி ஆனேன் - ரவி மோகன் குற்றச்சாட்டு
- அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா.
- தனது பிள்ளைகள் கார் விபத்தில் சிக்கிய தகவலே ஒரு மாதத்திற்கு பின்னர் தான் தனக்கு தெரிய வந்தது.
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்வின் அழகான துணை.
* மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல.
* இவ்வளவு நாள்களாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்.
* அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா.
* என் பிரச்சனைகள் அனைத்தும் கெனிஷாவுக்கு தெரியும்.
* எனது குழந்தைகளை வைத்து நிதி ஆதாயம் அடைய முயற்சி செய்கின்றனர்.
* தனது குழந்தைகளை பார்க்க விடாமல் பவுன்சர்கள் தடுக்கின்றனர்.
* மனைவியை பிரிந்ததில் இருந்து குழந்தைகளிடம் இருந்து வேண்டுமென்றே ஒதுக்கப்படுகிறேன்.
* தனது பிள்ளைகள் கார் விபத்தில் சிக்கிய தகவலே ஒரு மாதத்திற்கு பின்னர் தான் தனக்கு தெரிய வந்தது.
* காரை பழுதுபார்க்க இழப்பீட்டிற்கு எனது கையெழுத்து தேவைப்பட்ட பொழுதே விபத்து குறித்து தெரிய வந்தது.
* பொன் முட்டையிடும் வாத்தாகவே நான் பார்க்கப்பட்டேன், ஒரு கணவனாக நான் மதிக்கப்படவில்லை.
* காதல் என்ற போர்வையில் பெற்றோர், குழந்தைகளுடான பந்தம் என அனைத்தும் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது.
* ஆர்த்தி செய்த ஆடம்பர செலவுகளால் தான் கடனாளி ஆனேன். 5 ஆண்டாக நான் சம்பாதித்த தொகை பெற்றோருக்கு தரப்படவில்லை.
* தனது காயங்களை உணராமல் பலர் தனது கண்ணியத்தை இழிவுபடுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.