சினிமா செய்திகள்

பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சாம் சி.எஸ்.
- புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து சாம் சிஎஸ் பெரும் புகழைப்பெற்றார்.
- இவர் பின்னணி இசையில் வெளியான இந்தி திரைப்படமான விக்ரம் வேதா நல்ல வரவேற்பை பெற்றுது
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சாம் சிஎஸ். இவரது இசையில் உருவான விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கைதி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து சாம் சிஎஸ் பெரும் புகழைப்பெற்றார்.
இந்நிலையில், சோனு சூட் நடிக்கும் புதிய படத்தின் மூலம் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
ஏற்கனவே இவர் பின்னணி இசையில் வெளியான இந்தி திரைப்படமான விக்ரம் வேதா பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுது குறிப்பிடத்தக்கது.
Next Story